இடுகாடு-சுடுகாட்டுக்கு போகலாம் வரிங்களா?

Dhieja
2 min readApr 11, 2020

”இவன் மாரி பசங்கதான் பா அதிகமா லவ் ஃபெய்லியர்ல சாகுறாங்க..” நுங்கம்பாக்கம் இந்து இடுக்காடு-சுடுகாட்டில், புஷ்பாவின் கல்லறையின் மேல் படுத்துக்கொண்டு, எங்கள் நண்பனை பார்த்து சொல்கிறார்,­- அந்த சுடுக்கட்டில் பணி புரியும் ஃபாசில்.

எந்த சமூகத்தில் பிறந்திருந்தாலும், எவ்வளவு சம்பாதித்திருந்தாலும், கடைசியில் போகும் இடம் சுடுகாடுதான். அந்த இடதிற்க்கு நாங்கள் வாழும்போதே சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்தோம், மயானதிர்க்கு ஒரு பயனம் மேற்கொண்டோம்.

”ஆறு மணி வரைக்கும் தான் பிணங்களை கொண்டுவர முடியும் அதுகப்ரமா விட மாட்டோம்”- சொல்கிறார் மயானக் காப்பாளர். தலைமுரைகளாக அவர்கள் இந்த வேலையை செய்வதாகவும் அவர்களின் பிள்ளைகளும் இதெ பனியை தான் செய்கிறார்கள் என்றும் கூரினார்.

நாம் வழும்போது, ஏல்லா பொருட்களுக்கும் பனம் அதிகம் தருபவர்களுக்கு தரம் அதிகமாக இருக்கும், குறைவாக தருபவர்கலுக்கு தரம் குறைவாக இருக்கும் ஆனால் சுடுகாட்டிலோ, எரிபதர்க்கும், புதைபதர்க்கும், மின்சார உடல் தகனத்திர்க்கும் செய் வதர்க்கும் ஒரெ விலை தான்.

நாங்கள் ஃபாஸில் அவர்கள் இடம், இங்கே பேய் எதவது பார்ததுண்டா? என்று கேட்டோம், அதர்க்கு அவர்..”ஆய்யோ….. நான் இங்க முபத்தைந்து வருஷமா இருக்கென், இரவு சப்பிட்ரது, தூங்குரது எல்லாம் இங்க தான் ஆனா நா இங்க ஒன்னுமெ பாத்தது இல்ல.

அவர் கொஞ்சம் ஸரக்கு அடித்து இருந்தது போல் இருந்தது. நாங்கள் அதை பற்றி ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் சிறிது நேரம் கலித்து அவரே சொன்னார் ”சில பினங்கள் ரொம்ப மோசமான நிலையில வரும், இங்க அந்த பினங்களை வெச்சு சுடுகாட்டுக்கு வெளிய கூட நாத்தம் அடிக்கும் அதனால தினம் கொஞ்சம் குடிச்சா தான் எஙகளால வேலையே பாக்க முடியும்”.

அவருடைய அப்பாவும் இந்த வேலை தான் பாத்துகொண்டு இருந்தார்கலா? எண்று கேட்டோம், அவர் இல்லை என்று கூறி விட்டார், நாங்கள் விசாரித்தபோது தான் தெரிந்தது அவர் இதர்க்கு முன்பு ஒரு கால் டெக்ஸி ஒட்டுனராக இருந்ததாகவும், சில நாட்களுக்கு முன்பு தான் இங்கு வந்ததாகவும் கூறினார். தான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்ப வில்லை என்றும் அதனால் என் கடைசி காலங்களை இங்கேயே கழித்து விடுவேன் என்றும் கூறினார்.

அவருடைய பிள்ளைகளை எல்லாம் என்ன செய்கிரார்கள் என்று கெட்டதர்க்கு, அவருக்கு இரண்டு மகள்கள் இருப்பதாகவும் அவர்கள் படித்து முடித்து விட்டதாகவும் கூறினார். அவரின் மகள்களின் ங்யாபகம் வந்து விட்டதோ என்னவொ தெரியவில்லை அவர் கண்களில் இருந்து இரண்டு கண்நீர் துளிகள் சிந்தியது. அதர்க்கு மேல் அவர் இடம் கேல்வி கெட்க மனம் தயங்கியதால் நாங்கள் கிளம்பி விட்டோம்.

நாங்கள் அந்த சுடுகாடு முழுக்க நடந்து சென்றோம் ஃபாஸில் அவர்கள் சொன்னாது போலவே அங்கு இளைஞர்களின் சமாதிகள் தான் அதிகம் இருந்தது. ஆண்-பெண், ஏழை-பணக்காரன் என்ற விதியாசம் இல்லாமல் எல்லோறும் சமமாக உறங்கி கொண்டு இருந்தார்கள். அவ்வாறு எங்கள் சுடுகாடு பயனம் இனிதாய் முடிந்தது.

--

--

Dhieja

I am an aspiring Digital Journalist from India. Favorite topics: Soceity, Politics, films and books.